குண்டாக ஆசையா… இதோ டிப்ஸ்!


குண்டாக ஆசையா… இதோ டிப்ஸ்!

மெலிந்த உடல் பருமனாக எத்தனையோ மாத்திரைகளையும், பழம், காய்கறிகளையும் சாப்பிடுவோம். ஆனால் உடல் பருமனாக எளிதான வழி ஒன்று உள்ளது. அது தான் கொண்டைக் கடலை எனப்படும் மூக்கடலை.


பச்சை கொண்டைக் கடலையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பருமனாகும்.

கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்களும் இதனை சாப்பிடுவது நல்லது.

எண்ணிக்கையாக 10 முதல் 15 கொண்டைக் கடலைகளை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

திராட்சைப் பழம்:

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சைப் பழம் உதவுகிறது.

உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சையை விட 8 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது.

தொடர்ந்து உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிக்கும். அதே திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேளை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும்.


எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

Powered by Blogger.