கோடைகாலத்தில் ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்



கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே, நமக்கு எரிச்சலாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் வெயில் அதிகம் கொளுத்துவதால், உடலானது நீர்ச்சத்தை இழந்து, சுறுசுறுப்பின்றி இருக்கும். ஆகவே இக்காலத்தில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு வர வேண்டும். 



மேலும் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவைப் பராமரிக்க, நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களையும் உட்கொள்ள வேண்டும். நிபுணர்களின் கருத்துப்படி, கோடையில் தினமும் பழச்சாற்றினை குடித்து வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

 அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், கோடையில் சீராக ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதுடன், புரோட்டீன் நிறைந்த உணவுகளை சேர்த்து வர வேண்டும். மேலும் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள, உடல் வெப்பத்தை தூண்டும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், மலச்சிக்கல் ஏற்படுவதுடன், சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே கோடையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய டயட் டிப்ஸ்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.


கோடையில் அதிகப்படியான வெப்பம் மற்றும் வியர்வையினால், உடலானது வறட்சியடைய ஆரம்பிக்கும். உடல் நீர்ச்சத்து இல்லாமல் வறட்சி அடைய, உணவுகளை அதிகம் உட்கொள்ள தூண்டும். இத்தகைய செயல் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு பெரிதும் தடையாக இருக்கும். ஆகவே உடல் எடை குறைய வேண்டுமானால், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.


பழங்கள் கோடையில் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுவும் தர்பூசணி, திராட்சை மற்றும் ஆரஞ்சு போன்றவற்றை உட்கொண்டு வந்தால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதுடன், கலோரிகள் குறைவாகவும் இருக்கும்.

உணவுகளை தவிர்க்க கூடாது கோடைகாலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கியமானவற்றில் ஒன்று தான் உணவுகளை தவிர்க்கக்கூடாது. இதனால் உடலானது அதிக எடை போட்டு, பின் அது பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

பிரஷ்ஷான உணவுகள் எப்போதும் உணவுகளை பிரஷ்ஷாக சாப்பிட வேண்டும். ஏனெனில் மற்ற காலங்களை விட, கோடையில் உணவுப் பொருட்களானது விரைவில் கெட்டு போய்விடும். எனவே நல்ல பிரஷ்ஷான உணவுப் பொருட்களை உட்கொண்டு, நோய்வாய்ப்படுவதைத் தவிர்க்கவும்.

நீர்ச்சத்து நிறைந்த சாலட் கோடையில் சீரான இடைவெளியில் சாலட் சாப்பிட்டால், உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். எனவே நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் பசலைக்கீரை போன்றவற்றைப் பயன்படுத்தி சாலட் செய்து சாப்பிடுங்கள்.

புத்துணர்ச்சியூட்டும் உணவுகள் தயிர் மற்றும் மோர் போன்றவை உடலை கோடையில் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்கள். எனவே இவற்றையும் அவ்வப்போது சாப்பிட்டு வாருங்கள்.

குளிர்ச்சியான காய்கறிகள் கோடையில் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்களான வெள்ளரிக்காய், புதினா, முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

சோடாக்களை தவிர்க்கவும் அனைவரும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறேன் என்ற பெயரில் கடைகளில் விற்கப்படும் சோடாக்களை வாங்கி குடிக்கின்றனர். ஆனால் உண்மையிலேயே அதுதான் உடலுக்கு மிகவும் தீமையை விளைவிக்கும்

உலர் பழங்களை தவிர்க்கவும் உலர் பழங்களை சாப்பிட்டால் இதயத்திற் நல்லது தான். ஆனால் அதை கோடையில் சாப்பிட்டால், உடல் வெப்பம் அதிகரிக்கும். எனவே கோடையயில் இதனை அதிகம் சாப்பிட வேண்டாம்.

சர்க்கரையை தவிர்க்கவும் கோடையில் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டியவைகளில் முதன்மையானவை செயற்கை இனிப்புக்களை தவிர்ப்பது தான்.

கொழுப்புச்சத்துள்ள உணவுகளைத் தவிர்க்கவும் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை கோடையில் சாப்பிட்டால், உடலின் வெப்பம் அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆம், ஆகவே எண்ணெயில் பொரித்த சமோசா, சிப்ஸ், பஜ்ஜி, போண்டா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

கோடை பொழுதுபோக்குகள் கோடையில் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவக்கூடிய சில பொழுதுபோக்குகளை கண்டுபிடிக்க வேண்டும். அவற்றில் நீச்சல் மற்றும் தோட்டப் பராமரிப்பு தான் சிறந்தவைகள். எனவே இவற்றை செய்து கோடையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
Powered by Blogger.