இரத்த அழுத்தம் - போக்க உதவும் மூன்றுரத்தக்குழாய்களில் கொழுப்பு அடைத்துக்கொள்ளுதல், உடலில் உள்ள பாகங்களில் பரவி நிற்கும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது உயர் இரத்த அழுத்தம் உருவாகிறது. இதயத்துக்கான ரத்தத்தை அனுப்பும் ரத்தக்குழாய்களில் அடைப்பு வரும் போது அது மாரடைப்பாகிறது.மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு வந்தால் அது ஸ்டிரோக். ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்ந்து கொள்வது உயர் ரத்த அழுத்தத்திற்கும், இதய நோய்க்கும் மற்றும் ஸ்டிரோக்கினால் வரக்கூடிய கை, கால் செயல் இழப்பிற்கும் காரணமாக அமைகிறது. கொழுப்பற்ற உணவுகளை தேடி எடுத்து உண்ணுவதால் மட்டும் இதை தடுத்து விட முடியாது. நார் சத்து இல்லாத அளவிற்கு மீறிய மாவு பொருட்கள் உடலில் கெட்ட கொழுப்பை உருவாக்குகிறது.


இரவு உணவை தாமதமாக உண்பதும் அதிகமாக உண்பதும் கொழுப்பு சேர காரணமாகிறது. உடல் உழைப்பற்ற வாழ்க்கை மாற்றம் ஒரு காரணம். இதற்கு தீர்வு வெறும் நடைப்பயிற்சி மட்டும் போதுமானதாக இருக்காது. ஒரு மருந்து பாட்டிலை எடுத்து மருந்தை அருந்தும் முன் ஒரு குலுக்கு குலுக்குகிறோம்.

நமது உடல் பயிற்சியும் இது போல இருக்க வேணடும். அதாவது ஆடாமல், அசையாமல் நடந்து செல்லுதல் அதிக பலன்கள் தராது.மெல்லோட்டம், குதித்தல், குனிந்து நிமிர்ந்து செய்யும் பயிற்சிகள் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து ரத்தக்குழாய் அடைப்புகளை நீக்கும். ரத்துக்குழாய் அடைப்புகளை சரி செய்வதற்கான குழப்பமற்ற தெளிவான, யாவரும் கடைப்பிடிக்கத் தகுந்த உணவு முறைகளை ஜென் யோகா வழங்குகிறது. மேலும் நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட தனி சிறப்பு மிக்க பயிற்சிகளை ஜென் யோகா வழங்குகிறது.

மேலும் ஜென் யோகா மிகக் குறைந்த செலவில் உடலின் அத்தனை நோய்களை நீக்குவதற்கு வழி வகுக்கிறது. நோய் நொடியற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஜென் யோகா உன்னத நோக்கத்துடன் செயல்படுகிறது. எந்த பக்க விளைவுகள் இல்லாமல் சரியான வழியில் நம்மை அழைத்து செல்கிறது. நமக்கு சற்று பொறுப்புணர்வு இருந்தால் போதும். நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். உடலானது மாவுப்பொருளோ, சர்க்கரைப் பொருளோ தேவைக்கும் மேல் இருந்தால் இன்சுலின் குறைபாடு இல்லாத நேரத்தில் அதை கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்கிறது.

ஆனால், தேவைக்குமேலுள்ள புரதச்சத்தோ அல்லது உடல் ஏற்றுக்கொள்ளாத ரசாயன உப்புகளோ ரத்தத்தில் காணப்படும் போது அதை உடல் விஷமாக பார்க்கிறது. எனவே அதை வெளியே தள்ளுவதற்காக சிறுநீரகங்கள் வேகமாக வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இந்த வேலையில் சிறுநீரகத்திற்கு ரத்தத்தை வேகமாக அனுப்புவதற்காக உடலால் ரத்த அழுத்தம் உருவாக்கப்படுகிறது. இது ரத்த அழுத்தம் உருவாக இரண்டாவது காரணம்.

இந்நேரத்தில் ரத்த அழுத்தத்திற்கு உண்ணக்கூடிய மாத்திரைகள் உண்பது சரியாகுமா? உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கு உடலுக்கு உதவுவது சரியாகுமா?

ஆக உடலில் உள்ள இவ்விஷங்களை வெளியேற்றுவதற்கு வழி தேட வேண்டும். மனிதன் எப்போதும் கவலையிலும், பயத்திலும் மூழ்கிக்கிடக்கிறான். நாளைய பற்றிய பய உணர்வு, தனது வேலைகளில் தீர்க்க முடியாத சிந்தனைகள், மன உளைச்சல்கள் இவைகளால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது.இது போன்ற மனப்பதட்டத்தால் வரும் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு மூச்சுப் பயிற்சி, தியானம், விளையாட்டு போன்றவை பயனுள்ளதாக இருக்கும்.

Powered by Blogger.